0

14 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணியினரான, கோவில்பட்டியையடுத்த குருமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அணிக்குப் பரிசு வழங்குகிறார் கல்லூரி முதல்வர் குப்புசாமி.

வித்யாபாரதியின் 29-ஆவது அகில பாரத ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளுக்கான போட்டியிலும் தமிழ்நாடு அணி முதலிடம் பெற்றது.
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான போட்டியில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த குருமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
அதேபோல், 14, 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான போட்டியிலும் அதே பள்ளியின் அணியினர் முதலிடம் பெற்றனர். 19 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான போட்டியில், ராஜஸ்தான் அணியினர் முதலிடம் பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குப்புசாமி தலைமை வகித்து, போட்டிகளில் முதலிடம் பிடித்த அணியினருக்குப் பரிசுகளை வழங்கினார்.
அகில இந்திய வித்யாபாரதி ஒருங்கிணைப்பாளர் குட்டி, மாநிலச் செயலர் முகுந்தகிருஷ்ணன், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்கள் செய்திருந்தன.

Post a Comment

 
Top