0

நடிகைகள் பலரும் தங்களது வயதை வெளியில் கூறுவதில்லை. அந்த வகையில் இன்று(நவம்பர் 1) பிறந்த நாள் கொண்டாடும் பிரபல நடிகை இலியானா தனது உண்மையான வயதைக் கூறியுள்ளார். தனது பிறந்த நாள் குறித்து ரசிகர்களுக்கு டுவிட்டரில் அறிவித்துள்ள இலியானா, இவ்வருடம் 30 வயதை எட்டியுள்ளதாக கூறியுள்ளார். 2006ல் இலியானா தேவதாசு எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமான போது இலியனாவிற்கு 16 வயது என படக்குழுவினர் விளம்பரப்படுத்தினர். அது பொய் என தற்போது தெரியவந்துள்ளது. 2017ல் இலியானாவிற்கு 30 வயது என்றால் அவர் 1986ல் பிறந்திருக்க வேண்டும். இலியானா உண்மை வயதை கூறியதிலிருந்து தேவதாசு இயக்குனரை சமூக வலைதளங்களில் கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.

Post a Comment

 
Top